"அன்பகத்தில் விதைந்தகுலம்,
அயோத்தி வழி வளர்ந்தகுலம்,
ஆட்சி செய்ய தகுந்தகுலம்,
ஆசிரியர்ப்பணி சீராய் செய்தகுலம்,
துன்பங்களை மறக்கடிக்கும்
தானத்திற்கு தயங்காத தன்மானகுலம்,
விருந்தோம்பல் விரும்பிச்செய்யும்,
ஊருக்குள்ளே ஆலம் போல் வளர்ந்திருந்த பெருமைகுலம்,
தென்னகத்தின் திகழ்குலம்,
உழவு செய்து வாழ்ந்தகுலம்,
ஜமீன்தாரர் நாற்காலியை அலங்கரித்த புகழ்நிறைந்த உயர்ந்தகுலம்,
கோவில் பணிசெய்த ஆன்மீககுலம்,
உணவகத்திற்கு உகந்த அறுசுவைகுலம்,
முதலமைச்சர் பதவியுடன் புனிதம் காத்த ஓமாந்தூரார்குலம்,
காவடி சிந்துபடைத்த இன்பகுலம்,
நாடாளுமன்றத்தை அலங்கரித்த பெண்ணுரிமை பறைசாற்றும் சக்திகுலம், எனது - ரெட்டிகுலம்.
கவிரேஷ் (அபுதாபி)
ஆனால்....எத்தனையோ பெருமை வாய்த்த நம் குலத்திலும் சிலதடுமாற்றங்கள், பலபள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் ஒருங்கிணைந்து தடுமாறுபவர்களை தாங்கி பிடிக்கவேண்டும்,
பள்ளங்களை நிரப்ப வேண்டும், வளரும் பிள்ளைகள் நாங்கள், கடவுள் துணையுடன், மூத்தநிர்வாகிகளின் ஆசிர்வாதம், அனுபவம், இளைய சமுதாயத்தின் சிந்தனைகளையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம் .
ரெட்டிகுலம் தழைக்க ஒருங்கிணைவோம் என்ற தாரக மந்திரத்தை முழுமூச்சாக சுவாசிப்போம்.
முதலில் சுவாசம் ஒருகிணையட்டும்,பி ன்னர் அனைவரின் எண்ணம் போல் செயல்களும் ஒருங்கிணையட்டும்.
