குலத்தின்வளர்ச்சி, மிளிர்வு, கல்விவளர்ச்சி, வேலைவாய்ப்பை பொறுத்தே உள்ளது.
தகவல் தொழிலினுபத்தின் அபரிமிதமான வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்தி, வேலை வாய்ப்பு தகவலை குறித்த நேரத்தில் சந்ததியினரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவோம்.
இனி வரும் காலங்களில் வேலை வாய்ப்பு சவாலான விசயமாகும்.
அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தில், நம்குல மாணவர்களுக்கு வேலை கிடைப்பது கூடுதல் சிரமமாக உள்ள இக்காலகட்டத்தில் நமக்கு நமே அரசாங்கம் போல் செயல்பட்டு,எந்த ஒரு சின்ன வாய்ப்பையும் தவறவிடாமல்,இந்த பிரேத்யேக வேலை வாய்ப்பு இனையதளத்தை முழுமையாக பயன்படுத்தி, நம்குலமக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் உதவி செய்வோம்.
படித்தவர்கள் மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித்தகுதியை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் .தாங்கள் என்ன மாதிரியான வேலையை ,எந்தத்துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித்து பயன்பெறலாம் .
"வாழ்கை ஒரு வட்டம் அதில் முதலும் முடிவும் - ஒன்றே இனைந்து நாம் சென்றே முடிவைக்காண்போம்-இன்றே தொலைவில் சிகரம் முதல் அடிவைப்போம் தொலைவில் கனிகள் கனவை விதைப்போம்".
அணைத்து துறைகளிலும் நம்பிள்ளைகள் கோல் பிடிக்க வேண்டும் .அந்த துறையில் உள்ளவர்கள் இந்த GRF ல் இணைந்து ஆலோசனைகளை வழங்குங்கள் .ஆளுமைக்கு நம் பிழைகளை தயார்படுத்துங்கள் .